Tuesday 1 April 2014

சட்டைநாதர் பெயர் வரக் காரணம்

சட்டைநாதர் பெயர் வரக் காரணம்

ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் “தோணிபுரம்’ என்றும் போற்றப்படுகிறது.
மஹாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மஹாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மஹாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேஸ்வரன்.
பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு “சட்டை நாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது

Welcome

Hai Welcome to the official site of News